Freelancer / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
ஐந்து உயிர்களைக் காவு கொண்ட இராகலை முதலாம் பிரிவு தீ விபத்து சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் உத்தரவை, எதிர்வரும் 20ஆம் திகதிவரை நீடித்து, வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ். ஜினதாச, இன்று (06) உத்தரவிட்டார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பதுளை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தில் உயிர்தப்பிய தங்கையா இரவீந்திரன் (வயது 27) நீதிமன்றத்தில் ஐந்தாவது முறையாகவும்
ஆஜர்படுத்தப்படவில்லை.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சந்தேகநபரை பதுளையிலிருந்து அழைத்து வர முடியாதுள்ளதாக, சிறைச்சாலை அதிகாரிகள் இம்முறையும் நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தனர்.
இதனையடுத்து, ஸ்கைப் மூலமாக வழக்கு விசாரணையை மேற்கொண்ட நீதவான், 20ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினத்தில் சந்தேகநபரை மன்றில் ஆஜர்படுத்தும்படியும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஒக்டோபர் 7 ஆம் திகதி இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் முதலாம் பிரிவில் தற்காலிக தனி வீடு ஒன்றில் இரவு 10.15 மணியளவில் தீ விபத்து இடம்பெற்றது.
இந்த தீ விபத்து சம்பவத்தில் ஆறு பேர் வசித்து வந்த வீட்டில் ஒரு வயது மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.
சம்பவத்தில் இராமையா தங்கையா (வயது 61), அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57), ஆகியோருடன், மகளான தங்கையா நதியா (வயது 34) இவரின் பிள்ளைகளான, சத்தியநாதன் துவாரகன் (வயது13), (முதல் கணவரின் பிள்ளை) மற்றும் தற்போதைய தந்தையான மோகன்தாஸ் ஹெரோசன் (வயது 01) ஆகியோரே தீயில் கருகி உயிரிழந்தனர்.
மேற்படி தீ சம்பவத்தில் பெற்றோல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இராகலை நகரில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் தங்கையா இரவீந்திரன், பெற்றோல் வாங்கியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்ததையடுத்து, கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago