2025 மே 19, திங்கட்கிழமை

இராகலை வீட்டில் திடீர் தீ ; மூவர் மீட்பு

Princiya Dixci   / 2022 ஜூலை 15 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்திரிதென்ன கிராமத்தில் தனி வீடு ஒன்று, இன்று (15) அதிகாலை மூன்று மணியவில் தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சார ஒழுக்குக் காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் இராகலை பொலிஸார், சம்பவத்தின் போது வீட்டில் இரு பிள்ளைகள் உட்பட தாயுடன் மூவர் மாத்திரம் இருந்துள்ளனர் எனவும், இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

வீடு தீப்பற்றியதை அறிந்து கூச்சலிட்ட வீட்டாரின் குரல் கேட்டு, அயலவர்கள் விரைந்து வந்து செயல்பட்டதால் தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வீட்டின் ஒரு பகுதி கூரை மற்றும் படுக்கையறை ஆகியன தீப்பற்றியுள்ளதுடன், ஆடைகள் மற்றும் தளபாடங்களும் பகுதியளவில் தீக்கிரையாகியுள்ளதாகவும் இராகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X