R.Maheshwary / 2021 ஜூன் 07 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் தினமும் ஐவருக்கு குறையாத கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக தெரிவித்த இராகலை பொது சுகாதார பிரிவின் அதிகாரி லஹிரு விஜயரத்ன நேற்று (6) இங்கு 06 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இராகலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் அவரிடம் (7) வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெருந் தோட்டப்பகுதிகளில் இப்போது கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதுடன் .
ஐந்து மரணங்கள் தோட்டப்பகுதியிலும், இராகலை நகரில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளதென்றார்.
மேலும் இராகலை பிரதேசத்தில் இதுவரை 312 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில், நேற்று காலை பதிவான அறிக்கையின்படி 08 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.
ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊடாகவே இராகலை பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு ஏற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களின் குடும்பங்கள் அவதானம் பேணும்படியும் இதமக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அடுத்தவர்களுடன் தொடர்பு பேணாது வைத்தியர் உதவியை நாடுவதில் அக்கரை செலுத்துவதுடன் சுயத்தனிமை பேணி சுகாதார தரப்பினருக்கு ஒத்திவைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
30 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
9 hours ago