Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 பெப்ரவரி 01 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா, இராகலை பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட லிடேஸ்டேல்,சென் லெணாட்ஸ்,இராகலை தோட்டம்,டெல்மார் தோட்டம்,ஆகியவற்றில் ஆறு பேருக்கு நேற்று(31) மாலை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
“அதேவேளை, இராகலை நகரில் இயங்கும் வங்கி கிளையொன்றின் பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” என இராகலை பொது சுகாதார பரிசோதகர் பிரிவு அதிகாரி எஸ்.கோபிராஜ் தெரிவித்தார்.
இராகலை லிடேஸ்டேல், சென்லெனாட்ஸ் ஆகிய தோட்டங்களில் பணியாற்றும் உதவி தோட்ட அதிகாரிகளில் இருவரென நால்வரும்,இராகலை தோட்டத்தில் பணியாற்றும் உதவி தோட்ட அதிகாரி என ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என பொது சுகாதார பிரிவு அதிகாரி தெரிவித்தார்.
அதேநேரத்தில் தொற்றுக்கு உள்ளான ஏழு பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்கள் பயணித்த இடங்கள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதித்து வருவதாகவும் தெரிவித்துள்ள அதிகாரி இராகலை பிரதேசத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அவதானத்துடன் பொதுமக்கள் செயற்படுவதுடன் சுகாதார வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்து பொது சுகாதார பிரிவினர்களின் அறிவிப்புகளுக்கு மதிப்பளித்து ஒத்துழைப்பு நல்குமாறும் பொது சுகாதார பிரிவு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 hours ago
5 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
19 Jul 2025