2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இராஜினாமா கடிதத்தை கையளித்த கதிர்செல்வன்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அக்கரபத்தனை பிரதேசசபையின் தவிசாளர் சுப்ரமணியம் கதிர்செல்வன் தான் வகித்து வந்த பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அத்துடன், தனது இராஜினாமா கடிதத்தையும் நேற்று (31)  மாலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு கையளித்துள்ளார்.

அக்கரபத்தனை பிரதேசசபையின் தவிசாளர் கதிர்செல்வன் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பிரதேசசபை தவிசாளராக பதவி வகித்து வந்தார்.

  தான் பதவி விலகியமையானது தனது தனிப்பட்ட தீர்மானமே என்று தெரிவித்துள்ளதுடன்,  தனது பதவி விலகலுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கும் எவ்விதமான முரண்பாடும் இல்லை என்றும்  அவர் தனது கடிதத்தில்  தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் காங்கிரஸ் உயர் பீடம் எடுக்கும் முடிவுகளுக்கு இணங்குவதாகவும், யாரையும் கேட்டு தனக்கு இந்த பதவி வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X