2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

இரு முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்து

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள்  விபத்துக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் வியாழக்கிழமை (14) மதியம் 01மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொட்டகையிலிருந்து  ஹட்டனை நோக்கி சென்ற இரண்டு முச்சக்கர வண்டிகளில் ஒரு முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு முச்சக்கர வண்டியினை தள்ளிக்கொண்டு வளைவு ஒன்றை திருப்ப முற்பட்ட போது இரண்டுவண்டிகளும் மோதுண்டதில் முச்சக்கர வண்டிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் சதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .