2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

‘இருக்கும் இடத்திலேயே இருங்கள்’

Gavitha   / 2020 நவம்பர் 29 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாவட்டத்தில் இருந்து, கொழும்பு மற்றும் பிறநகர் பகுதிகளுக்கு தொழிலுக்காகச் சென்றுள்ளவர்கள், தாங்க தங்கியிருக்கும் இடத்திலேயே, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி சிறிது காலத்துக்குத் தங்கியிருக்குமாறு குடும்ப உறவினர்கள் அறிவிக்கவேண்டும் என, நுவரெலியா மாவட்ட பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (29) உத்தியோகப்பூர்வ அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ள அவர், நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு, மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இருந்து நுவரெலிய மாவட்டத்துக்கு வருகை தருபவர்களால், நுவரெலியா மாவட்டமும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளது என்றும் இம்மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அதில் அம்பகமுவ பிரதேச செயலகத்திலேயே, அதிக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பயணக் கட்டுப்பாடுகளை மீறி, வெளிமாவட்டங்களில் இருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு வருகை தந்திருக்கும் நபர்கள், தங்களை அடையாளம் காட்டி, பிசிஆர் பரிசோதனை முன்னெடுத்துக்கொள்வதற்கு முன்வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X