Janu / 2024 மே 23 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
ஜெனரேட்டரை இயக்கிவிட்டு தூங்கச் சென்ற தந்தையும் மகனும் உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
புபுரஸ்ஸ நெஸ்டா காலனியை சேர்ந்த, 40 வயதுடைய சனத் ரோஹன மற்றும் 17 வயதுடைய ககன மதுசங்க ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வெசாக் தினத்தை முன்னிட்டு புபுரஸ்ஸ நகரில் வியாழக்கிழமை (23) அன்று உணவு வழங்கும் நிகழ்வு நடாத்துவதற்கு ஆயத்தமாகியிருந்ததால் , அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் தனது அறையில் ஜெனரேட்டர் இயந்திரத்தை இயக்க வைத்து குறித்த தந்தையும் , மகனும் உறங்கச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் புபுரஸ்ஸ காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது, ஜெனரேட்டரில் இருந்து வந்த கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது .
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புபுரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago