Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஜூன் 28 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (27) மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளி ஒருவர் வழங்கிய தொலைபேசி அழைப்பின் பேரில், பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, தோட்டத்திலுள்ள தேயிலை புதருக்கு அருகாமையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிறுத்தை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago