R.Maheshwary / 2022 ஜனவரி 18 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
மூங்கில் கலை இலக்கிய களத்தின் இலக்கிய கூடல் அதன் செயலாளரும் ஆன்மீக யோகக்கலை ஆசிரியருமான சுப்பிரமணியம் நடராஜ் தலைமையில், நேற்று முன்தினம் (16 )அன்று டயகம சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் நடைபெற்றது.
தைப்பொங்கல் தொடர்பாக ஆசிரியர் சிவயோகனின் நாட்டார் பாடலுடன் ஆரம்பமானதுடன்,
ஆரம்ப உரையை, இலக்கிய களத்தின் ஒழுங்கமைப்பாளரான ஊடகவியலாளர் கே. புஷ்பராஜ் வழங்கினார்.
அத்துடன், ஆசிரியராக பணியில் இணைந்து அதிபராக தமது பணியில் 25ஆண்டுகள் "வெளிவிழா" காணும் மூங்கில் கலை இலக்கிய களத்தின் காப்பாளரும் ஸ்தாபகருமான குழந்தைவேல் பாலகிருஸ்ணன் மூங்கில் கலை இலக்கிய நண்பர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் அதனைத் தொடர்ந்து கவியரங்கம், பொன்னர் சங்கர் நாடகம், பாராம்பரிய பாடல்கள், நூலின்பம், கருத்தாடல் என்பன இடம்பெற்றதுடன் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் சந்திரன் கலந்து சிறப்பித்திருந்தார்.

35 minute ago
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
35 minute ago
2 hours ago