2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

இலவச அரிசி கையளிப்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

அரசாங்கத்தின் இலவச அரிசி வழங்கும் வேலைதிட்டத்துக்கு அமைய அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இஞ்ஞஷ்ரி, டில்லரி, ​ஓல்டன், இஸ்ரஸ்பி, மாநெலி, புரோன்லோ, மஸ்கெலியா ஆகிய கிராம சேவகர் பிரிவிலுள்ள 3,750 க்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு இலவசமாக அரிசி பொதிகள் மார்ச் 31ஆம் திகதி வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ,நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாகவே இவை வழங்கிவைக்கப்பட்டன.

இ.தொ.கா வின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஷ்வரனால் இவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அம்பகமுவ பிரதேச செயலாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .