2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர்கள் கல்விக்காக குரல் கொடுக்க வேண்டும்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 14 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

'எமது பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள இளைஞர்கள், கல்விக்காக என்று குரல் கொடுக்கின்றார்களோ அன்றுதான் நாம் முழுமையான கல்வியை பெறமுடியும்' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சக்திவேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கல்வியின் அவசியத்தை நாம் முழுமையாக உணர்ந்துள்ளோம். ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் காணப்படுகின்ற வளங்களைப் பார்க்கும்போது  நாம் எவ்வளவோ பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றோம்.

எனவே, பல நவீன உபகரணங்களை வழங்கி கல்வித்துறையை ஊக்குவிக்க வேண்டும், எமது சமுகத்தை சார்ந்தவர்களும்; கல்வித்துறையில் சாதிக்க வேண்டும் என்பதே எனது ஆவலாகும்.

எனவே, எமது சமுகத்தின் கல்வி வளர்ச்சிக்கு என்னால் முடிந்த அளவுக்கு உதவ தயாராக உள்ளேன்' என அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .