Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 20 , மு.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெளசல்யா, ரஞ்சித் ராஜபக்ஷ
அலை பேசியில் பேசிக் கொண்டே தண்டவாளத்தில் பயணித்த யுவதி ஒருவர், சனிக்கிழமை (19) மாலை 4.30 மணியளவில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் குடாகம பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மேகா என்ற (17) வயதுடைய யுவதியே புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கிப் பயணித்த யுவதி தண்டவாளத்தில் அலைபேசியில் பேசிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார், ஹட்டனுக்கும் கொட்டகலைக்கும் இடையிலான 60 அடி பாலத்திற்கு அருகில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற 1008 ஆம் இலக்க ரயிலில் மோதி யுவதி உயிரிழந்துள்ளார்
புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த யுவதியின் சடலத்தை புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரயிலில் ஏற்றினர். அந்த ரயில் கொட்டகலை ரயில் நிலையத்திற்கு மீண்டும் செலுத்தப்பட்டு அங்கு சடலம் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் திம்புள்ள- பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago