2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இளைஞரின் சத்திரசிகிச்சைக்கு அரவிந்தகுமார் எம்.பி நிதியுதவி

R.Maheshwary   / 2022 ஜனவரி 25 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

இரு சிறு நீரகங்களும் பழுதடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் 23 வயதான இளைஞர் ஒருவரின், வைத்திய செலவுகளுக்காக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரினால்  இரண்டு இலட்சம் ரூபாய்  நிதி வழங்கப்பட்டுள்ளது.

 அரவிந்த குமார் எம்.பி மேற்கொண்ட முயற்சியின் பயனாக, அவுஸ்திரேலியா நாட்டில் இருக்கும் அவரது புதல்வனான பிரவீன் அரவிந்தகுமார் இந் நிதியை வழங்கியிருந்தார்.

நிதி முகாமைத்துவத்தை கருத்திற் கொண்டு, அந்நிதியிலிருந்து முதல் கட்டமாக ஒரு இலட்சம் ரூபாயை பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் கே.சர்மிளாதேவி, சிகிச்சை பெற்று வரும் இளைஞரின் தாயாரிடம் நேரில் சென்று வழங்கினார்.

மிகுதி பணத்தை, சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் போது வழங்கப்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X