2026 மே 14, வியாழக்கிழமை

dd

இளைஞர் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட பதுளையில் 55 பேருக்குத் தகுதி

எம். செல்வராஜா   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டம் சார்பாக, 2020ஆம் ஆண்டுக்கு இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட 55 வேட்பாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சு, இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சுக்களின் வழி நடாத்தலில், எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் இலங்கை இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வு, கடந்த 11, 12 திகதிகளில் இடம்பெற்றன. இத்தேர்தல், நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களில் நடைபெறவுள்ளன.

பதுளை மாவட்டம் சார்பாக, 59 பேர் வேட்பாளர்களாக நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்நியமனப் பத்திரங்கள் நான்கில் பல்வேறு குறைபாடுகள் இருந்தமையினால், அவை நான்கும் நிராகரிக்கப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட 55 நியமனப் பத்திரங்களில், 39 பேர் ஆண் வேட்பாளர்களாகவும் 16 பேர் பெண் வேட்பாளர்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்களில் பசறையைச் சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணொருவரும் அடங்குகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .