Freelancer / 2023 மார்ச் 08 , மு.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
“ஈழத்தமிழர் ஈழவரே எங்கிருந்தாலும் நம்மவரே" என்று ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.
நாட்டிலும் சமூகத்திலும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படக்கூடிய நேர்மையான தூய்மையான அரசியல் செயற்பாட்டாளர்களை பயிற்றுவித்து அனுப்புவதை இலக்காகக் கொண்டே இன்று "தோழர் இரட்னசபாபதி அரசியல் கற்கைகள் நிலையம்" ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது என்றார்.
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமாக ஆரம்பிக்கப்படும் நிலையத்தின் பணிகள் விரைவில் நாட்டில் ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதோடு சிங்கள மொழி மூலமான கற்பித்தல் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஏழு ஆண்டுகளை நிறைவு செய்து எட்டாவது ஆண்டு தொடக்கத்தினமான கடந்த பெப்ரவரி 28ம் நாள் ஹட்டன் நகரில் ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் தோழர் இரட்னசபாபதியின் பெயரில் மேற்படி கற்கைகள் நிலையம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் விசேட அழைப்பாளராக ஹட்டன் நகரசபை உறுப்பினர் கேசவமூர்த்தி உட்பட ஆசிரியர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், கட்சித்தோழர்கள் என பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ்பேசும் சமூகங்கள் பிரதேசத்தாலும் மதத்தாலும் சிதறி பேரினவாத ஒடுக்குமுறையிலும் முதலாளித்துவ சுரண்டலிலும் அல்லலுற்ற வேளை "மதத்தால் இந்துவானாலும் மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனும் தீரச்சைவன் ஆனாலும் ஈழத்தமிழர் ஈழவரே எங்கிருந்தாலும் நம்மவரே" என முழக்கமிட்டு பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான போராட்டத்திற்கூடாக தமிழ்பேசும் மக்களுக்கு சமத்துவ சமதர்ம ஆட்சியை நிலைநாட்ட முடியும்.
மொழிவெறியாகவும் உயர் கல்வி பிரச்சினையாகவும் காட்டப்பட்ட தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை வர்க்க கண்ணோட்டத்திலும் மார்க்சிய அணுகு முறை ஊடாகவும் உடமைப்பாட்டு பிரச்சினையாக வெளிப்படுத்தி தமிழ்பேசும் மக்களின் அரசியல் களத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் தோழர் இரட்னாவின் பெயரில் ஆரம்பிக்கப்படும் இந்த கற்கைகள் நிலையம் எதிர்காலத்தில் தூய்மையான அரசியல் செயற்பாட்டாளர்களை நாட்டுக்கும் தமிழ்பேசும் மக்களுக்கும் தருவிக்கும் பணியை சிறப்பாக செய்யும் என்றார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago