2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

உக்குவளையில் கழிவு அகற்றும் திட்டம்: மே 4 முதல் ஆரம்பம்

Editorial   / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம். ஜலீல்

உக்குவளை - மானாம்பொட பகுதியிலிருந்து மாருகொன பாலம் வரையான சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரப்பகுதியிலும், அதனை அடுத்துள்ள குறுக்குப் பாதைகளின் சுமார் 100 மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களிலிருந்து அகற்றப்படும் கழிவுகளைச் சேகரிக்கும் விசேட திட்டத்தை உக்குவளை பிரதேச சபை ஆரம்பிக்கவுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் இந்த முறையான கழிவு அகற்றும் மற்றும் வகைப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகச் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இப்பிரதேச மக்களின் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்கவே இப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கழிவுகள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக மக்களிடமிருந்து கட்டணம் அறவிடப்படவுள்ளது. எனவே, இச்சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், முன்கூட்டியே பிரதேச சபையில் உரிய கட்டணங்களைச் செலுத்தித் தங்களது பதிவுகளை உறுதி செய்துகொள்ளுமாறு உக்குவளை பிரதேச சபை அறிவுறுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .