Sudharshini / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஹப்புத்தளை, உடவேரியா தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக பத்து குடும்பங்களைச் சேர்ந்த 60பேர் நேற்று (30) பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.உதயகுமாரவின் பணிப்புரைக்கு அமைய, உடவேரியா தோட்டத்தின் 20ஆம் இலக்க லயன் குடியிருப்பில் வசித்து வந்த 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பதுளை, பண்டாரவளை, ஹப்புத்தளை, வெலிமடை, பசறை மற்றும் ஹல்தமுல்லை ஆகிய பகுதிகளில் மணிசரிவு அபாயம் நிலவவுதாகவும்; தொடர்ச்சியாக மழைப் பெய்து வருவதனால் மண்சரிவு அபாயங்கள் உள்ள இடங்களிலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
பதுளை ஓயா ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதால், தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026