Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2018 ஜூன் 06 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை- நேத்ராகம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சாரத் தூண்கள் இரண்டு, கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக முறிந்து விழும் நிலையில் இருப்பதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில், மின்சார சபையில் முறையிட்ட போது, மின்சாரத் தூண்களைப் புகைப்படம் எடுத்து வருமாறு அதிகாரிகள் கூறியதாகவும், அதிகாரிகள் கூறியதைப்போன்று மின்சாரத் தூண்களைப் படமெடுத்துக் காட்டியதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
ஆனால், மின்சாரத் தூண்களைச் சீர்செய்யும் ஒப்பந்தம், நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதால், இந்தப் பிரச்சினை தொடர்பில், குறித்த நிறுவனத்திடம் முறையிடுமாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுதொடர்பில் அறிவித்து ஒரு வருடம் கழிந்துள்ள நிலையிலும்கூட, இதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லையென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேசத்தில் 34 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இந்த மின்சாரத் தூண்கள் தமக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
22 minute ago