2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உணவு விஷமடைந்ததால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில்

Editorial   / 2020 ஜனவரி 31 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

உணவு விஷமடைந்ததன் காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்தின் கினிகத்தேன- களுகல சிங்கள வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 41 மாணவர்கள் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை உணவை உட்கொண்ட பின்னர் மாணவர்களுக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டதாகவும் இதனால் 11 மாணவிகள் உள்ளடங்களாக 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, கினிகத்தேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்தப் பாடசாலையில் நடை​பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் போது, மாணவர்களுக்கு மாலு பணிஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை உட்கொண்ட மாணவர்களே நோய்வாய்ப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .