2025 மே 08, வியாழக்கிழமை

உணவுப் பொருள்களை பதுக்கிவைத்த கட்டடத்துக்கு சீல்

Editorial   / 2020 நவம்பர் 06 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்   

தலவாக்கலை - லிந்துலை நகரசபைப் பகுதியில், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் கட்டடமொன்றுக்கு, இன்று (6) சீல் வைக்கப்பட்டது.

மத்திய மாகாணத்தின் உதவி உள்ளாட்சிமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அதிகாரிகள், இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

உதவி ஆணையாளர் அலுவலகத்துக்கு, நுகர்வோர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அதிகாரிகளும்,  தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் செயலாளரும், மேற்படி கட்டடம் அமைந்துள்ள பகுதிக்கு, இன்று (6)  கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.

இதன்போது உணவுப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்ததையடுத்து, அதிகாரிகள் கட்டடத்துக்கு சீல் வைத்தனர்.

இது தொடர்பில் கருத்துரைத்த தலவாக்கலை - லிந்துலை
நகரசபையின் செயலாளர் பண்டார, 'காலாவதியான பொருள்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தைப் பரிசோதிக்க வந்தோம். எனினும் கட்டடம் மூடப்பட்டிருந்ததால் அதனை சீல் வைத்தோம். 

'கொரோனா நெருக்கடி காலத்தில் இங்கிருந்தே, மக்களுக்கு பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X