2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

உதவிகளை வழங்கினார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

Freelancer   / 2023 ஜனவரி 21 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

நுவரெலியா - ஹட்டன் வீதியில்  ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு  இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொழும்பு தேஸ்டன் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான உணவு, உடை,மருந்துகள் அனைத்தும் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டுள்ளன . 

அத்தோடு விபத்தில் பலியான குடும்பத்தினரை சந்தித்ததுடன், உயிரிழந்தவர்களுக்கு  ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

வாகன விபத்தில் காயமடைந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஏதும் தேவைகள் ஏற்படின் தம்மை தொடர்பு கொள்ளுமாறு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்  கேட்டுக்கொண்டார். 

மேலும், நானுஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் வரும் காலங்களில் கனரக வாகனங்கள், பார ஊர்திகள் ,பேருந்துகள் செல்ல அனுமதிக்க கூடாது என சம்மபந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். 

அத்துடன் நானுஓயா நாவலர் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு வேலி,பாதசாரி கடவை உடனடியாக அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .