2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

உப-பிரதேச சபை காரியாலயம் திறப்பு

Kogilavani   / 2017 மார்ச் 24 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ  

இரத்தினபுரி மாவட்டத்துக்கு உட்பட்ட, அதிகஷ்டப் பிரதேச மக்களின் நலன் கருதி, இரத்தினபுரி, கிலிமலே பிரதேசத்தில், உப- பிரதேச சபை காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.  

இரத்தினபுரி பிரதேச சபைக்குட்பட்ட கிலிமலே, ஸ்ரீ பலாபெந்தல, சிறிபாகம, வேவல்வத்தை போன்ற அதிகஷ்டப்பிரதேச மக்களின் நலன் கருதியே, இக்காரியாலயம் புதன்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது.  

மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், பிரதேச சபையின் ஊடாகத் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, 25 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இரத்தினபுரி பிரதேச சபைக்கு வரவேண்டிய சூழலே காணப்பட்டது.  

இதைக் கவனத்தில் கொண்ட சப்ரகமுவ மாகாண சபை, மேற்படி மக்களின் தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதற்காக, கிலிமலே பிரதேசத்தில், உப-பிரதேச சபைக் காரியாலயம் ஒன்றை அமைப்பதற்கு, நடவடிக்கை எடுத்தது. இதற்கமைவாக, கட்டப்பட்ட காரியாலம், மக்களின் பாவனைக்காக புதன்கிழமை கையளிக்கப்பட்டது.  

 இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் கலந்துகொண்டு, உப-பிரதேச சபைக் காரியாலயத்தை திறந்து வைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X