2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

பெருந்தோட்டப் பகுதிகளில், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய சுயத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில், 300 பேருக்கு, உபகரணங்கள் மற்றும் காசோலைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

மத்திய மாகாண கால்நடை மற்றும் விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில், கொட்டகலை கலாசார மண்டபத்தில், சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், மீன்பிடி அமைச்சரும் விவசாயத்துறை அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திசாநாயக்க, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு உபகரணங்களையும் காசோலைகளை வழங்கி வைத்தனர்.

மத்திய மாகாண கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய அமைச்சின் 400 இலட்சம் ரூபாய் செலவில், உபகரணங்களும் காசோலைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .