2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

உயிருடன் சிறுத்தை மீட்பு

Janu   / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, பல்லேகலை முதலீட்டு வலயத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கம்பியை பயன்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொறி ஒன்றில் சிக்கியிருந்த சிறுத்தை ஒன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பாக காட்டில் அதை விடுதலை செய்தனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக ரன்தெனிகல வனஜீவராசிகள் திணைக்களத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற குழுவினர்  மேற்படி சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை பொறியில் இருந்து மீட்டெடுத்துள்ளனர்.

பின்னர் ரந்தெனிகல பிரதேசத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக காட்டில் விடுவித்தனர். வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்தியர் அக்கலங்க பினிதிய தலைமையிலான குழுவினரே மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சுமார் 6-7 வயது மதிக்கத்தக்க நன்கு வளர்ந்த மேற்படி ஆண் சிறுத்தைக்கு எது வித உற்காயங்களும் இருக்கவில்லை என்றும், எனவே அதன் வெளி காயங்களுக்கு மட்டும் அவசியமான சிகிச்சையை வழங்கி அதை காட்டில் விடுவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 பி.கேதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .