R.Maheshwary / 2021 ஜூலை 01 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷன்
நானுஓயா பிரதேச வர்த்தகர் ஒருவரின் வீட்டில், அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 126 மூட்டை இரசாயன உரத்தை, கைப்பற்றியதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவை அதிகாரசபையின் சிரேஸ்ட விசாரணை அதிகாரி ஜே.எம்.ஆர். கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே, நுகர்வோர் சேவை அதிகார சபையினர் இந்த உரங்களை கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து கிழங்கு உரம், இலை உரம், டி.டீ.எம். கட்டி உரம் உள்ளிட்ட 50 கிலோகிராம் நிறையுடைய 129 மூட்டைகள் பதுக்கப்பட்டிருந்ததாகவும், நானுஓயா பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இவற்றைக் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரை இந்த மாதம் 8ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago