R.Maheshwary / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
இராகலை பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட ஹைபொரஸ்ட் தோட்டத்தில் உரங்களைக் கொண்டுச் சென்ற லொறியை குறித்த பகுதியிலுள்ள விவசாயிகள் மடக்கி பிடித்துள்ளனர்.
சிறியளவில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரங்களை வழங்காமல், ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்பவர்களுக்கு மட்டும் உரங்களை சூட்சுமமான முறையில் வழங்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
நீண்ட காலமாக இந்நிலை தொடர்வதுடன், அவ்வப்போது கிடைத்த சிறு அளவிலான உரத்தை வைத்து, விவசாயத்தை முன்னெடுத்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, மாதாமாதம் வழங்கும் உரம் கிடைக்காமையினாலேயே குறித்த லொறியை மடக்கி பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .