2025 மே 03, சனிக்கிழமை

‘உரிமைகளை பாதுகாக்க புதுச் சங்கம்’

Gavitha   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாநகர சபையில் தொழிலாளர்களாக பணியாற்றும் 500க்கும் மேற்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் நலன்புரி உரிமைகளை பாதுகாக்கவே, நுவரெலியா மாநகர தொழிலாளர் சங்கம் உதயமாகியுள்ளது என, அச்சங்கத்தின் தலைவர் ஆர்.நேசராஜ் தெரிவித்தார்.

நுவரெலியா மாநகர தொழிலாளர் சங்கம், அதன் எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் தொடர்பில் தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று (19), மாலை, நுவரெலியாவில் உள்ள கூட்டுறவு சங்க விடுதியில், சங்கத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இந்தச் சங்கம், மாநகர சபை நிர்வாகத்துக்கு எதிரான சங்கம் இல்லை என்றும் இது, சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட சங்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா மாநகர சபையில் கடமையாற்றும் 500க்கும் அதிகளவான வெளிக்கள தொழிலாளர்களுக்கு, ஒவ்வொரு 5 வருட மாநகர சபை ஆட்சியில் இழைக்கப்படும் அநீதிகளையும் மீறப்படும் உரிமைகளையும் தட்டிக்கேட், சங்கம் ஒன்று தேவை என்பதற்காகவே, இச்சங்கம் அமைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சங்கத்தில், சந்தா செலுத்தும் 200 அங்கத்தவர்கள் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்களிடம் இருந்து, மாதாந்தம் 250 ரூபாய் சந்தாப் பணம் அறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X