R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் ஆஸிக்
நாட்டின் அனைத்து பாகங்களிலும் வீடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களது உரிமைகள் உறுதிப்படுத்த வேண்டுமென, வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சத்தியவாணி சரசகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கண்டியின் அச்சங்கத்தின் தலைமையகத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இது குறித்து வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
வீட்டுவேலைத் தொழிலாளர்களது உரிமைகள் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் குறித்து கடந்த 14 வருடங்களாக தமது சங்கம் போராடிய போதும், ஹிசாலினியின் மரணத்தின் பின்பே பலர் கண் திறந்துள்ளனர்.
உரிய காலத்தில் போதியளவு தொழில் பாதுகாப்பு கிடைத்திருந்தால், ஹிசாலினியின் மரணம் சம்பவத்திருக்காது. எனவே தமது வீட்டு வேலைத்தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், இது தொடர்பில் தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால சில்வாவுடன் நேற்று (10) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், இதன்போது, தமது தொழில் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க அமைச்சரால் உறுதியளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago