Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2018 ஜூன் 26 , பி.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஷ் கீர்த்திரத்ன
உலக மரபுரிமைப் பட்டியலிலிருந்து, நக்கிள்ஸ் வனாந்தரம் நீக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதென, “கேபெக்” நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார். குறித்த வனாந்தரமானது, 21,000 ஹெக்டெயர் நிலப்பரப்பைக் கொண்டிருந்ததால், யுனெஸ்கோ நிறுவனத்தின் ஏற்பாட்டில், கடந்த 2010ஆம் ஆண்டு, உலக மரபுரிமைப் பட்டியலில், நக்கிள்ஸ் வனாந்தரம் இணைத்து க்கொள்ளப்பட்டது.
எனினும், தற்போது மேற்படி வனத்தின் நிலப்பரப்புக் குறைவடைந்து வருவதாகவும் நக்கிள்ஸ் வனாந்தரத்துக்குச் சொந்தமான நிலத்தை, வெளியாருக்கு விற்பனை செய்யும் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாலும், உலக மரபுரிமைப் பட்டியலிலிருந்து, மேற்படி வனாந்தரம் நீக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதென, அவர் மேலும் கூறினார்.
நக்கிள்ஸ் வனாந்தரத்துக்கு உரித்தான 21,000 ஹெக்டெயர் நிலப்பரப்பில் 14,000 ஹெக்டெயர் நிலப்பரப்பே தற்போது எஞ்சியுள்ளதாகவும் ஏனைய நிலப்பரப்பு, வெளியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், இது தொடர்பில் கடந்த 21ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல கேள்விக்கான நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவால், அமைச்சர் கிரியெல்லவிடம் கேள்விகள் எழுப்பபட்டன.
இதற்குப் பதிலளித்த அவர், அரச பெருந்தோட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு இலாபம் பெறாத நிலங்கள், தனியாருக்கு வழங்குவது தொடர்பாக, 5 ஆலோசகர்களின் ஆலோசனைகளுக்கமைய, திறைசேரியின் அனுமதியுடன், அமைச்சர் கபீர் ஹஸீமால் 250 யோசனைகள் முன்வைக்கப்பட்டன என்றும் அதற்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்த போதிலும், அதில் ஒன்றுகூட, இன்றுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றும் சபையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago