Editorial / 2023 ஏப்ரல் 30 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
நுவரெலியா மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து நானு ஓயா பட்டிபொல வீதி வழியாக ஹோர்டன் உலக முடிவு பகுதிக்கு வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பகுதியிலிருந்து பிலக்வூல் சந்தி ஊடாக உலக முடிவு பகுதிக்கு உல்லாச பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் ஒன்று (29) மாலை வீதியில் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த பஸ்ஸைசெலுத்திய சாரதி காயங்களுக்கு உள்ளாகியதுடன் பஸ்ஸில் பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வீதியில் ஏனைய வாகனங்கள் பயணிக்க முடியாது குறித்த பஸ் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆகையால் வீதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே ,விபத்துக்கு உள்ளான பஸ்ஸை அப்புறப்படுத்தும் வரை இவ் வீதி ஊடாக உலக முடிவு பார்க்க பயணிக்கும் பயணிகள் மாற்று வழியாக ஒஹிய பகுதியில் இருந்து உலக முடிவுக்கு வரும் பிரதான வழியை பயன் படுத்துமாறு பொலிஸார் பயணிகளுக்கு அறிவித்துள்ளனர்.
28 minute ago
34 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
34 minute ago
56 minute ago