2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

உலக வங்கி உதவியுடன் நுவரெலியாவுக்கு பொது மலசலகூடம்

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 'வஸிப்' கருத்திட்டம், உலக வங்கியின் உதவியுடன், நுவரெலியா மாநகருக்கான பொது மலசலகூடத் தொகுயொன்றை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

இரு மாடிகளைக் கொண்ட நவீன முறையிலான உத்தேச மலசலகூடத் தொகுதிக்கு, 15 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மேல்மாடி, வெளிநாட்டு உள்ளாலப் பயணிகளைக் கவனத்தில் கொண்டு அமைக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வஸிப் கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும், பின்தங்கிய மாவட்டங்களின் நீர் வழங்கல் மற்றும் சுகநலப் பாதுகாப்பு மேம்பாட்டுச் செயற்றிட்டத்துக்கு அமைவாகவே, இந்த மலசலகூடத் தொகுதி அமைக்கப்பட்டு வருகிறது எனவும், நிர்மாணப் பணிகள் பூர்த்தியானதும், அதன் நடத்து வேலைகள்; நுவரெலியா மாநகர சபைக்கு ஒப்படைக்கப்படவுள்ளன எனவும், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டீ.ஜி.எம்.வி. ஹபுஆரச்சி தெரிவித்தார்.

பாடசாலைகளில் சுகநலப் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், இந்த மாவட்டத்தில் தற்போதைக்கு 6 பாடசாலைகளுக்கு மலசலகூட வசதிகள் செய்து கொடுப்பதற்கான பூர்வாங்க வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன.

விசேடமாக, தோட்டப்பகுதிக் குடியிருப்புகளுக்குச் சுத்தமானதும் பாதுகாப்பானதுமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் கருத்திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், கிளெஸ்கோ மேல் பிரிவுத் தோட்டத்திலுள்ள 226 வீடுகளுக்கும் குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கான நீர் விநியோகத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்த நிலையில், வீடுகளுக்கான தனித்தனியான இணைப்புகளை வழங்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் நுவரெலியா மாவட்டத்துக்கு மாத்திரம், நீர் வழங்கல், சுகநலப் பாதுகாப்புக் கருத்திட்டங்களுக்காக, சுமார் 2,500 மில்லியன் ரூபாய் நிதியுதவி, உலக வழங்கியின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது.

வஸிப் கருத்திட்டம், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் வழங்கல், சுகநலப் பாதுகாப்புத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட விசேட செயற்திட்டமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X