2026 பெப்ரவரி 20, வெள்ளிக்கிழமை

உலர்ந்த கஞ்சாவுடன் ஒருவர் கைது

Janu   / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பேகமுவ பொலிஸாரால் புதன்கிழமை (18)மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, உலர்ந்த கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கரபிஞ்சாகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றை  ஒன்றை சோதனையிட்ட போது, அங்கிருந்த உலர்ந்த கஞ்சா 28 கிலோ கிராம் தொகை மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரான 34 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரையும் கஞ்சா தொகையையும் வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 சுமனசிறி குணதிலக்க


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .