2025 மே 12, திங்கட்கிழமை

உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவீ    

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கம்பளை, தொலுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட மில்லகாமுல – கோணட்டுவல கிராமம், 20 ஆம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்பகுதியில் வாழும் சுமார் 428 குடும்பங்களுக்கு தேவையான உலருணவுப் பொருள்கள், நேற்று முன்தினம் (25)  வழங்கிவைக்கப்பட்டன.

சுமார் 1,500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. குறித்த உதவித் திட்டத்துக்காக 4 சுமார் 4 இலட்சம் செலவானதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேற்படி கிராமத்தில் உள்ள விகாரைகளின் விகாராதிபதிகள், கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்புடனேயே, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நிவாரணத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

மில்லகாமுல – கோணட்டுவல கிராமத்தில் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X