Sudharshini / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மன்றங்கள் 659 மில்லியன் ரூபாயை அரசாங்கத்துக்கு கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக மாகாண மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இந்நிதியை செலுத்த தவறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் அவர் அமைச்சின் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்காக தேசிய கடன் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக கடன் வழங்கப்பட்டுள்ளன. இந்நிறுவனமானது,
உள்ளூராட்சி மன்றங்களுக்கு கீழே இயங்குகின்றது. இதற்கான நிதி திறைசேரியில் இருந்தே வழங்கப்படுகின்றது.
இந்நிலையில், உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பாலான நிதியை தம்புள்ளை மாநகர சபையே செலுத்த வேண்டியுள்ளது. இது மொத்தமாக 118 மில்லியன் ரூபாயை செலுத்த வேண்டியுள்ளது. மேலும், பலாங்கொடை நகரசபை மற்றும் கம்பளை நகர சபை ஆகியவற்றினால் பாரிய தொகை, அரசாங்கத்துக்கு கடனாக செலுத்த வேண்டியுள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.
8 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago