2025 ஜூலை 21, திங்கட்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை கூடுகிறது

Editorial   / 2017 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கையை கூட்டும் படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவுறுத்தியதாக அமைச்சர் பைசர் முஸ்தபா எம்மிடம் தெரிவித்தார் என்று,

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். 

உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் அவரது அமைச்சில், நேற்று (23) நடத்திய சந்திப்பின் போதே இதற்கான உடன்பாடு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில், ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பான விபரக்கோப்பை அமைச்சரிடம் நாம் கையளித்தோம் எனவும் தெரிவித்தார். 

இந்த சந்திப்பில் அமைச்சர் மனோ, அமைச்சர்களான பழனி திகாம்பரம், வே. ராதாகிருஷ்ணன், மற்றும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ், வேலுகுமார் போன்றோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X