2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

உழவு இயந்திரம் விபத்து ; சாரதி காயம்

Janu   / 2023 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை வெவஸ்ஸ தோட்டத்திற்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்று  புதன்கிழமை (16) பிற்பகல் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

வெவஸ்ஸ தோட்டத்திற்கு சொந்தமான இவ் உழவு இயந்திரம் தோட்ட காரியாலயத்தில் இருந்து வெவஸ்ஸ தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த போது பதுளை பசறை  வீதி 7 கட்டை பகுதியில்  வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த  47 வயதுடைய சாரதி  பதுளை போதனா  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து  தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X