2025 ஜூலை 21, திங்கட்கிழமை

உழைக்காமல் வாழுகின்ற கூட்டம் ராஜபக்‌ஷ கூட்டம்

Freelancer   / 2023 ஏப்ரல் 03 , பி.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

நமது நாட்டில் உழைக்காமலே வாழுகின்ற ஒரு கூட்டமே மஹிந்த ராஜபக்‌ஷவின் கூட்டம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமானவேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.  

பொருளாதார நெருக்கடியால் இருக்கின்ற எமது நாட்டிற்கு முதலீட்டாளர்களை தடுக்கும் வகையில் மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் செயல்பட்டு வந்துள்ளது. ஆகையால் தான் நாட்டுமக்கள் கோட்டபாய ராஜபக்‌ஷவையும் மஹிந்த ராராஜபக்‌ஷவையும் நாட்டு  விரட்டினார்கள். ஆனால் அவர்களை பாதுகாப்பதற்காக தற்பொழுது பரமாத்மா ஒருவர் வந்துள்ளார். அவர்தான் தற்போதுள்ள ரணில் விக்ரமசிங்க ஆவார். நல்லாட்சி காலத்தில் நல்லவராக இருந்தார் இந்த ஆட்சியில் அவர் மோசமானவராக உருவெடுத்து இருக்கிறார். 

 

ஊழல் செய்துள்ள 134பேரையும் பாதுகாப்பதற்கு அந்த பரமாத்மா அங்குசென்றுள்ளார்  நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போது தமிழர்களை அடக்கு முறைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம்தான் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் அந்தகாலத்தில் சிங்களவர்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. இன்று அந்தசட்டம் மாறுபட்டு உள்ளது. இந்த பயங்கரவாத சட்டத்தின் ஊடாக ஒரு நபர் கைதுசெய்யப்பட்டால் ஒரு வாரம் அல்லது இரண்டு வருடங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ஆகவே, இந்த பயங்கரவாத தடைசட்டத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையாக எதிர்க்கிறது  இனிவரும் காலங்களில் அரசாங்கத்தையும் ரணில் விக்ரமசிங்கவையும் எவரும் விமர்சிக்க முடியாது  நாட்டுக்கு  நல்ல சட்டங்கள் அமுல்படுத்தினால் அதனை நாம் வரவேற்போம் பாதிப்புக்கு உள்ளான சட்டங்கள்வந்தால் அதனை எதிர்த்து செயல்படுவோம் என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X