Sudharshini / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஷ்பராஜா
நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை ஊட்டுவில் தமிழ் வித்தியாலயத்துக்கு புதிய கட்டடம் ஒன்றை அமைத்துக்கொடுக்க உள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இன்று (7) கூறினார்.
'மழை காரணமாக கடந்த 5ஆம் திகதி, இப்பாடசாலை கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் இங்கு கல்வி பயின்று வந்த சுமார் 100 மாணவர்கள் ஊட்டுவில் தோட்டத்திலுள்ள மாற்றிடமொன்றில் கல்வி நடவடிக்கைகளைத் தொடரவுள்ளனர்.
இந்;நிலையில், நான் உட்பட பலர், 6ஆம் திகதி ஊட்டுவில் தோட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை அவதானித்தோம்' என்றார்.
'அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கு அமைய இப்பாடசாலைக்கு புதிய கட்டடமொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'; எனவும் அவர் இதன்போது கூறினார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026