2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘ஊடகத்துறை இடமளிக்காது’

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சிவாணி ஸ்ரீ

மக்களுக்குச் சொந்தமான சொத்துகளை, பல்வேறு தரப்பினர், அவர்களது தேவைகளுக்காகச் சூரையாடுவதற்கு, ஊடகத்துறை ஒருபோதும் இடமளிக்காதென, சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள நிலுக்கா ஏக்கநாக்க, நேற்று (18), இரத்தினபுரியில் உள்ள சமன் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் ​தெரிவிக்கும்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், எந்தவொரு பதவியும் நிரந்தரமானதல்லவெனவும் தனக்கு வழங்கப்பட்டுள்ள சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவிக்கு மதிப்பளித்து, சமூகத்தை சாதாரணமான முறையில் உயர்த்துவதற்கு முயல்வதாக உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X