2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஊவா மாகாண சபைக்கு புதிய அமைச்சர்கள்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண சபைக்கு 04 புதிய அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஊவா மாகாண சபை ஆளுநர் எம்.பி.ஜயசிங்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை (22) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதற்கமைய ஊவா மாகாண சபையின் நிதி, திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, மின்சாரம், சக்தி வலு, நிர்மாணத்துறை, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் சம்பத் திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

ஊவா மாகாண சபையின் சுகாதாரம், சுதேச வைத்தியம், சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, மகளிர் விவகாரங்கள், சமூக நலனோம்புகை அமைச்சராக ஆர்.எம்.குமாரசிறி ரத்னாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

ஊவா மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர்வழங்கள், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் கூட்டுறவுதுறை அமைச்சராக செந்தில் தொண்டமான் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

ஊவா மாகாண சபையின் விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள், சுற்றுலா, போக்குவரத்து, கலாசாரம், ஆடைக் கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சராக சாலிய சுமேத சில்வா பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .