Sudharshini / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாமிவேல் சுதர்ஷினி
'ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சை பொறுப்பேற்பவர் வேலைத்திட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி, மாகாணத்தில் கல்வி ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்' என, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
'இரண்டு தசாப்த காலத்துக்கு பிறகு ஊவா மாகாணத்தில் தமிழ்க் கல்வியமைச்சைப் பெற்று, சாகித்திய விழாவை சிறப்பாக எமது ஆட்சியின் போது நடத்தினோம். 5 வருட வேலைத்திட்டத்தை ஒரு வருடத்தில் முடித்துக் காட்டினேன்' என்றும் அவர் கூறினார்.
ஊவா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'ஊவா மாகாணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சி மாற்றத்தின் ஊடாக, மக்களுக்கான சேவைகளை சரியாக மேற்கொள்ள வேண்டும். கல்வி அமைச்சராக நான் இருந்த போது பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளேன்.
எதிர்வரும் 22ஆம் திகதி, நாடாளுமன்ற அமர்வின்போது, உதவி ஆசிரியர்களின் சம்பள உயர்வு குறித்துத் தனியாள் மனுவொன்றை சமர்பிக்கவுள்ளேன். பிரதமர், இந்தியாவிலிருந்து திரும்பியவுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளேன். இதன்மூலம் அவர்களுக்கு நிலையான சம்பளத்தைப் பெற்றுத்தர முடியும் என எண்ணுகிறேன் ' என்றார்
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago