2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

ஊவா மாகாண முதலமைச்சர் சரீரப் பிணையில் விடுதலை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ருக்மன் காமினி ராஜபக்ஷ மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டிருந்த ஊவா மாகாண முதலமைச்சர், ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இவ் வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பசறை பிரதேச சபை உறுப்பினர், ருக்மன் காமினி ராஜபக்ஷவின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத்துக்கு பசறை மாவட்ட நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதலமைச்சர் ஷாமர சம்பத் தஸாநாயக்க, நேற்று(01) நீதிமன்றில் ஆஜரானபோதே நீதவான் ருவன்திகா மாரப்பன இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .