2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஊவா ஆளுநரை சந்திப்பு

Gavitha   / 2020 நவம்பர் 02 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியின் பதுளை மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் ஆகியோர்,  ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலை, ஆளுநர் இல்லத்தில் இன்று (2) சந்தித்ததுடன், பதுளை மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடினர். 

இந்தக் கலந்துரையாடலில், ஊவா மாகாணத்தில் பெரும்பாலான ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாமை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான உலருணவுப் பொருள்களை வழங்க  வேண்டியதன் அவசியம், பெருந்தோட்ட மக்களுக்கான சேவையின்போது அரச அதிகாரிகளின் அசிரத்தையான செயற்பாடுகள் என்பவைத் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இவ்விடயங்கள் தொடர்பில் உடனடியாக பரிசீலிக்குமாறு, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X