2025 மே 03, சனிக்கிழமை

‘ஊவாக்கலை மக்களை பாதுகாக்கவும்’

Gavitha   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

அக்கரப்பத்தனை பிரதேசசபைக்குக்குட்பட்ட ஊவாக்கலை கீழ் பிரிவு தோட்டத் தொழிற்சாலைக்கு அருகில் இருந்து, ஊவாக்கலை மேல் பிரிவு ஊடாக நெல்லிமை வரை செல்லும் பிரதான வீதியில், பாதுகாப்பு கற்கள் இட்டு, அவ்வீதியின் ஊடான விபத்துக்களைத் தடுக்க, அக்கரப்பத்தனை பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊவாக்கலை பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கெனவே குன்றும் குழியுமாக இருந்த இந்தப் பாதையை, கடந்த கால அரசாங்கம் செப்பனிட்டிருந்தது என்றும் எனினும், வாகனங்கள் முறையாக செல்ல முடியாத அளவுக்கே வீதி அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாதை அபிவிருத்தி செய்யப்பட்ட சிறிது காலத்தில், தண்ணீர் தாங்கியொன்றைப் பொறுத்திக்கொண்டு சென்ற உழவு இயந்திரம், 100 அடி பள்ள்தில் விழுந்து விபத்துக்குள்ளானதுடன், 2 பேர் பலியாகியிருந்தனர் என்றும் இதையடுத்தும் சிறு சிறு விபத்துகள் நடைபெற்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வீதி அபிவிருத்தி தொழிலுக்காக சென்ற இளைஞன், நேற்று (15) இப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்திருந்தார்.

எனவே, இவ்வாறு அடிக்கடி இடம்பெறும் விபத்துகளைத் தவிர்த்து, மேலும் உயிர்கள் காவு கொள்வதைத் தடுப்பதற்கு, அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X