2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

எடின்புரோவில் கஞ்சா சேனை சுற்றிவளைப்பு

Kogilavani   / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா நானுஓயா எடின்புரோ தோட்டத்துக்கு மேற்பகுதியில் உள்ள அரசாங்க வனப்பகுதியில், மிகவும் சூட்சுமுமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனையொன்றை, நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், நேற்று  (07) மாலை சுற்றி வளைத்துள்ளனர்.

குறித்த கஞ்சா சேனையில், 3,5 அடி உயரமான 272 கஞ்சா செடிகள் காணப்பட்டன என்றும் சுற்றிவளைப்பின் போது கஞ்சா செய்கையில் ஈடுபட்ட நபர் தப்பியோடிவிட்டார் எனவும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நுவரெலியா நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக 3 செடிகளை மட்டும் வைத்துக்கொண்டு ஏனைய கஞ்சா செடிகளை தீயிட்டு அழிப்பதற்கு விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அத்துடன், இதன் பின்னணியில் உள்ளவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் விசேட அதிரடிப்படையினர் ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் நுவரெலியாவில் கஞ்சாவுடன் நபர்கள் கைதாகியிருந்தாலும் வனப்பகுதியில் பாரியளவில் கஞ்சா செய்கை செய்யப்பட்ட தோட்டமொன்று சுற்றிவளைக்கப்பட்டமை இதுவே முதற்சந்தர்ப்பம் என்று, விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X