2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எட்டியாந்தோட்டையில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்தது

R.Maheshwary   / 2022 ஜூலை 21 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 என்.ஆராச்சி

எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பல இடங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மாயமாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கில்ம, பெரன்னாவ, அமனாவல, வேவல்தலாவ ஆகிய பகுதிகளில் உள்ள நாய், பூனை ஆகிய செல்லப்பிராணிகள் திடீரென்று காணாமல் போவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாக குறித்த பிரதேசத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் கூடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் கூட சிறுத்தைகளால் கூடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் சீபொத், தெனவக்க தோட்டத்தில் இரண்டு  சிறுத்தைகள்  வலையில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் புளத்கொஹுபிட்டிய வனஜீவராசிகள் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, இந்த பிரதேசத்திலுள்ள அம்பான மற்றும் நாரங்கல ஆகிய வனங்களிலுள்ள சிறுத்தைகள் உணவைத் தேடி மக்களின் வாழ்விடங்களை நோக்கி வருவதாகவும் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு, மீண்டும் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியுள்ளது என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .