Freelancer / 2023 ஏப்ரல் 24 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கே.குமார்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் பெருந்தோட்ட தேயிலை உற்பத்தியில் பாரிய பிரச்சனைகள் ஏற்பட்டு தேயிலை தோட்டங்கள் மூடும் நிலை ஏற்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் கொண்டுவந்துள்ளார்.
தற்பொழுது இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் வெளிநாட்டு டொலர்கள் கிடைக்கின்றன. ஆனால் எதிர் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு தேயிலை இறக்குமதி செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டிய அவர் ஜனாதிபதி தலையிட்டு இந்தபிரச்சனைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நுவரெலியா நகர அபிவிருத்தி தொடர்பாகவும் நீண்ட நேரம் உரையாடினோம் என்று தெரிவித்த சதாசிவம், இன்று பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் சம்பளம் இன்றைய பொருட்களின் விலைகளின் விலை உயர்வை பார்க்கும் பொழுது பொதுமானதல்ல. அதேவேளை ஒரு சில தோட்டங்களில் மாத்திரம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. 90 சதவீதம் பெருந் தோட்டங்களில் அதிகரிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப் படுவதில்லை என சுட்டிக்காட்டினேன் என்றார்.
34 minute ago
40 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
40 minute ago
49 minute ago