2025 மே 09, வெள்ளிக்கிழமை

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Janu   / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை கோணக்கலை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாம்பு தீண்டியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக திங்கட்கிழமை (21) குறித்த பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது  

கடந்த 16 ம் திகதி கோணக்கலை கீழ் பிரிவைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் தொழிலாளி ஒருவர் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் பாம்பு தீண்டி பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (20) காலை உயிரிழந்தார். 

இவ்வேளையில் தோட்ட வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரை பெற்று தருமாறும் ,தோட்ட பகுதிகளை துப்பரவு செய்து அங்குள்ள பாம்பு புற்றுகளை அகற்றி வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் தெரிவித்து அங்குள்ள பாம்புகளை பிடித்து காட்டுப் பகுதிகளில் விடுமாறும் கூறியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ராமு தனராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X