Kogilavani / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
நாடளாவிய ரீதியில் வீட்டு வேலைப் பணிகளில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுக்கு, எவ்வித தொழில் உரிமைகளும் கிடைப்பது இல்லை என்று, வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேற்படிச் சங்கம், கண்டியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், சங்கத்தின் தலைவி சரசகோபால் சத்தியவாணி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில், வீடுகளில் பணிப்புரியும் வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு, அரசினாலும் சமூகத்தினாலும் எவ்வித அங்கிகாரமும் வழங்கப்படுவது இல்லை என்றும் தெரிவித்தார்.
வீட்டு வேலைப் பணிகளில், பெண்களே அதிகம் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லாததால் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏனைய தொழிலாளர்களைப்போன்று, பணிக்குச் செல்லாவிட்டால் எத்தகைய சம்பளமும் இல்லை என்றும் இதனால் ஏனையத் தொழிற்றுறையிலுள்ளவர்கள் அனுபவிக்கும் உரிமைகள், சலுகைகளை, வீட்டு வேலைத் தொழிலாளர்களும் அனுபவிக்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த பத்து வருடங்களாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருவதாகவும் ஆனாலும் இதுவரையும் எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
17 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago